சாப்பிட சாப்பிட தெவிட்டாத... கோவை பேமஸ் கொண்டக்கடலை பிரியாணி: செஃப் தீனா ரெசிபி

6 days ago
ARTICLE AD BOX

சாப்பிட சாப்பிட தெவிட்டாத கோவை பேமஸ் கொண்டைக்கடலை பிரியாணி செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம். கொண்டைக்கடலை பிரியாணி ஒரு கரண்டி சாப்பிட்டால், இன்னும் 2 கரண்டி பிரியாணி வாங்கி சாப்பிடுவீர்கள். அந்த அளவுக்கு இந்த கொண்டைக்கடலை பிரியாணி சுவையாக இருக்கும். 

Advertisment

கோவை பேமஸ் கொண்டைக்கடலை பிரியாணி செய்வது எப்படி என்று பிரபல சமையல் கலைஞர் செஃப் தீனாவின் யூடியூப் சேனலில், மனோன்மணி சமைத்துக் காட்டியுள்ளார். இப்போது கொண்டைக்கடலை பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

கொண்டைக்கடலை பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி 1/2 கிலோ
வெள்ளை கொண்டைக்கடலை 150 கிராம்
தக்காளி 2
சின்ன வெங்காயம் 100 கிராம்
பெரிய வெங்காயம் 100 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் 6
கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு
புதினா ஒரு கைப்பிடி அளவு
தயிர் 50 மி.லி
உப்பு தேவையான அளவு

Advertisment
Advertisement

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

கடலை எண்ணெய் 100 மி.லி
நெய் 2 டேபிள்ஸ்பூன்
பட்டை 4 
கிராம்பு 4
ஏலக்காய் 2
கல்பாசி 2
மராட்டி மூக்கு 2
பிரியாணி இலை 2
அன்னாசிப்பூ 2

கொண்டைக்கடலை பிரியாணி செய்முறை:

சின்ன வெங்காயத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். கொண்டைக்கடலை 8 மணி நேரம் ஊறவைத்த பின், வேகவைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 

அடுப்பை பற்ற வைத்து பிரியாணி செய்யும் பாத்திரத்தை எடுத்து வையுங்கள். காய்ந்ததும், கடலை எண்ணெய் ஊற்றுங்கள், அதனுடன் நெய் ஊற்றுங்கள், அடுத்து மசாலாப் பொருட்களான பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, மராட்டி மூக்கு, பிரியாணி இலை, அன்னாசிப்பூ எல்லாவற்றையும் போடுங்கள். அடுத்து, அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போடுங்கள். பாதி வதங்கியதும், பெரிய வெங்காயத்தை போட்டு வதக்குங்கள். பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து போடுங்கள். 

வெங்காயம் ஒரு 60 சதவீதம் வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்ட் போடுங்கள். புதினா, கொத்தமல்லி போட்டு வதக்குங்கள். ரொம்ப வதக்கக் கூடாது. 60 சதவீதம்தான் வதக்க வேண்டும். அடுத்து தக்காளி போடுங்கள். புளிப்பு இல்லாத தயிர் ஊற்றுங்கள். ஒரு 2 நிமிடம் வதக்குங்கள். அடுத்து, வேகவைத்து எடுத்து வைத்துள்ள கொண்டைக்கடலையைப் போடுங்கள். 

அரிசி அளவைவிட 2 மடங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். 2 கிளாஸ் அரிசிக்கு 4 கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள். இந்த தண்ணீர் ஊற்றும்போது, அதில் கொண்டைக்கடலை வேகவைத்த தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லேசாக கொதி வரும்போது தேவையான அளவு உப்பு போடுங்கள். இப்போது, 20 நிமிடத்துக்கு முன்னதாகவே ஊறவைத்து எடுத்த அரிசியைப் போடுங்கள். 1 நிமிடம் கழித்து கலந்துவிடுங்கள். 5 நிமிடம் அதிக தீயில் வையுங்கள். பாதி வெந்த பிறகு, மிதமான தீயில் வைத்துக்கொள்ளுங்கள். அரிசியும் தண்ணீரும் சமமாக வந்த பிறகு, சமம் செய்துவிட்டு, உள்ளே வாழை இலையை வைத்து மூடுங்கள். பிறகு, மேலே மூடி போட்டு மூடி தம் போடுங்கள். 10 நிமிடம் தம் போட்ட பிறகு திறந்து பார்த்தால் சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார். 

Read Entire Article