சஹால் - தனஸ்ரீக்கு விவாகரத்து வழங்கி மும்பை நீதிமன்றம் தீர்ப்பு!

11 hours ago
ARTICLE AD BOX

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சஹால் - தனஸ்ரீ ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ வர்மா, பாடல் நிகழ்ச்சிகளில் பாடகியாக அறிமுகமாகினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்து நடன போட்டிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தன. ஆனால் 2023-ஆம் ஆண்டில் சஹாலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிய தனஸ்ரீ வர்மா விவாகரத்து குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்துவந்தார்.

இதையும் படிக்க: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி!

முன்னணி பந்துவீச்சாளராக இருந்த சஹால், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின்னர் அணியில் இருந்து கலட்டிவிடப்பட்டார். இருப்பினும், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18 கோடிக்கு அவரை எடுத்தது.

இந்த நிலையில், இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவெடுத்து விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும், மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்கவிருப்பதால், அதற்கு முன்னதாக அவரது வழக்கை முடித்து வைக்க அவரது வழக்குரைஞரும் கோரிக்கை வைத்தார்.

அதன்படி, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சஹால் ஒப்புக் கொண்டார். இதனால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதையும் படிக்க: ராஜஸ்தான் அணிக்கு கேப்டனான ரியான் பராக்..! பேட்டராக தொடரும் சஞ்சு சாம்சன்!

Read Entire Article