சர்வதேச அங்கீகாரம் பெற்றது 3 தமிழ்த் திரைப்படங்கள்: முழு விவரம்..

2 hours ago
ARTICLE AD BOX
pa ranjith in thangalaan movie select rotterdam film festival

சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்படங்கள் பற்றிப் பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் பா.ரஞ்சித். அட்டைகத்தி படம் தொடங்கி, ரஜினி நடிப்பில் காலா, கபாலி என கவனம் ஈர்த்தவர்

இவர் ‘தங்கலான்’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருது, சென்னை திரைப்படத் திருவிழாவில் ஜூரி விருது பா.ரஞ்சித்துக்கு வழங்கப்பட்டது. இப்படம் ரூ.100 கோடிகளை பாக்ஸ் ஆபீஸில் வசூல் செய்தது.

படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறினாலும், ரசிகர்கள் மத்தியில் படக்குழு எதிர்பார்த்த அளவிற்கான பிணைப்பினை உருவாக்கவில்லை. இது தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் ‘இந்தப் படம் எதனால் மக்கள் மத்தியில் கனெக்ட் ஆகவில்லை’ என்ற கேள்வி எனக்குள் இன்னும் ஓடிக்கொண்டுள்ளது’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘தங்கலான்’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டோம் திரைப்படத் திருவிழாவில் திரையிடத் தகுதி பெற்றுள்ளது.

முன்னதாக இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ, இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத் இயக்கிய ‘பேட் கேர்ள்’ ஆகிய படங்களும் ரோட்டர்டோம் திரைப்படத் திருவிழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆக, இந்த ஆண்டு தமிழ் சினிமாத் துறையிலிருந்து 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

pa ranjith in thangalaan movie select rotterdam film festivalpa ranjith in thangalaan movie select rotterdam film festival

 

The post சர்வதேச அங்கீகாரம் பெற்றது 3 தமிழ்த் திரைப்படங்கள்: முழு விவரம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article