ARTICLE AD BOX
Sweet Potatoes And Diabetes : சர்க்கரை நோயாளிகள் சக்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாமா? கூடாது என்பதை குறித்து இங்கு காணலாம்.

சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதற்கென சிகிச்சை எதுவுமில்லை. வாழ்நாள் முழுவதும் இந்த நோயை கட்டுப்படுத்த உணவு முறையில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். எனவே, சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவில் கார்போஹைட்ரேட்டுகளை குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரை சாதாரணமாக வைத்து இருக்க சர்க்கரை நோயாளிகள் குறைந்த கிளசமிக் குறியீட்டை கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். அவற்றை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு சாதாரணமாக இருக்கும் அதுபோல சர்க்கரை நோயாளிகள் குளுக்கோஸ் உள்ள எதையும் சாப்பிட வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலானோர் சாப்பிட தயங்கும் ஒரு உணவு எதுவென்றால் சர்க்கரை வள்ளி கிழங்கு தான்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு குளிர்காலத்தில் கிடைக்கும் ஒரு இனிப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது. பெரும்பாலான மக்கள் இதை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள். இன்னும் சிலரோ பல வகையான ரெசிப்பிகள் செய்து சாப்பிட விரும்புவார்கள். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை பற்றி பேசினால், இதில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. அவை நம்முடைய நம்முடைய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும், எடையை குறைக்கவும் உதவுகிறது என்றாலும், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடலாமா? என்ற கேள்வி பலருக்கும் உண்டு. இதற்கான பதிலை இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது ரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும். இருப்பினும் இதில் இருக்கும் நார்ச்சத்து இந்த செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. மேலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பல வகையான வகைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆரஞ்சு வள்ளி கிழங்கில் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. இது மற்ற வகை கிழங்குகளை விட ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க செய்யும். எனவே சர்க்கரை நோயாளிகள் எந்த வகையான சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட்டாலும் அதை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சர்க்கரை வள்ளிக்கிழங்கை குளிர்காலத்தில் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைவள்ளி கிழங்கை சுட்டு சாப்பிடுவதற்கு பதிலாக, அதை ஆவியில் நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடுவதன் மூலம் சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் கிளைசெமிக் குறியீடு குறையும். சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை இயல்பாக வைக்க விரும்பினால், வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்காம்! தினமும் கூட சாப்பிடலாம்!

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைவள்ளிக்கிழங்கை அளவாக எடுத்துக் கொள்ளும்போது அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். முக்கியமாக குறைந்த அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.