ARTICLE AD BOX
நம் முன்னோர்களில் பெரும்பாலான இளம்பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்கள் குளிக்கும்போது கிழங்கு மஞ்சளை துணி துவைக்கும் கல்லில் அழுத்தி உரசி, அந்த பேஸ்ட்டை எடுத்து முகத்திலும் கால்களிலும் தாராளமாகத் தேய்த்துக் குளித்து வருவது வழக்கம்.
அவர்களுக்கெல்லாம் முகத்தில் பருக்களோ அல்லது வேறு வகையான சருமப் பிரச்னைகளோ வந்ததாகத் தெரியவில்லை. தற்காலத்தில் நகரத்தில் வசிக்கும் பெண்கள் பலரும் முகத்தில் வரும் பருக்கள், கட்டிகள், கருந்திட்டுக்கள் என பல வகையான கோளாறுகளுக்காக ப்யூட்டி பார்லரை நாடுவது வழக்கமாக உள்ளது. முகத்தின் சரும ஆரோக்கியம் காக்க இப்பவும் மஞ்சளை நாம் எவ்வாறெல்லாம் உபயோகிக்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.ஒரு கப் அரிசி மாவுடன் இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூளை நன்கு கலக்கவும். பின் அதனுடன் தேவையான யோகர்ட் சேர்த்து பேஸ்ட் ஆக்கவும். அந்த பேஸ்ட்டைக்கொண்டு முகம் முழுக்க சிறிது நேரம் மசாஜ் செய்யவும். அதன் பின் முகத்தைக் கழுவிவிடவும்.
2.சம அளவில் தேனும் யோகர்டும் எடுத்து கலந்து கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பேஸ்டாக்கவும். அந்தப் பேஸ்ட்டை சமமாக முகம் முழுக்க தடவி வைக்கவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து பிறகு முகத்தைக் கழுவிவிடவும்.
3. இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து அதனுடன் ஒரு கப் ஆலோவேரா ஜெல் சேர்த்து கலந்துகொள்ளவும். கலவையை முகம் முழுக்க தடவி அரை மணிநேரம் அப்படியே வைத்திருக்கவும். பின் முகத்தை நன்கு கழுவிவிடவும்.
4. சம அளவில் யோகர்டும் மஞ்சள் தூளும் எடுத்து இரண்டையும் நன்கு கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளவும். அந்தப் பேஸ்ட்டை முகம் முழுக்க தடவி வைத்து, சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி விடவும்.
5. சம அளவில் மஞ்சள் தூள், தேன் மற்றும் கடலை மாவு (Besan) ஆகிய மூன்றையும் எடுத்து ஒன்றாய் கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளவும். அந்தப் பேஸ்ட்டை முகம் முழுக்க தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவிவிடவும்.
6. இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து அதை இரண்டு டேபிள் ஸ்பூன் பாலுடன் சேர்த்து நன்கு கலந்து
பேஸ்டாக்கிக் கொள்ளவும். அந்தப் பேஸ்ட்டை முகம் முழுக்க தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின் முகத்தைக் கழுவிவிடவும்.
7. சம அளவில் மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு நெய் சேர்த்து பேஸ்டாக்கிக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் மாஸ்க்காகப் போட்டு பதினைந்து நிமிடம் கழித்து முகத்தைக் கழுவிவிடவும்.
மேலே கூறிய முறைகளில் மஞ்சளை உபயோகித்து உங்கள் முகத்தின் சருமத்தைப் பாதுகாத்து வந்தால்
முகம் எந்த விதக்கோளாறுகளுமின்றி ஆரோக்கியமும் பளபளப்பும் பெறும்.