கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள் இன்று…. ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட ‘ரெட்ரோ’ படக்குழு!

3 hours ago
ARTICLE AD BOX

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ரெட்ரோ படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள் இன்று.... ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட 'ரெட்ரோ' படக்குழு!

ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி பிரபலமானவர் கார்த்திக் சுப்பராஜ். அதைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்ற கார்த்திக் சுப்பராஜ், ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களையும் இயக்கி வெற்றி கண்டார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவும், கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.கார்த்திக் சுப்பராஜ் பிறந்தநாள் இன்று.... ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்ட 'ரெட்ரோ' படக்குழு! காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இவர்களுடன் இணைந்து ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் நடிகை ஸ்ரேயா இந்த படத்தில் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது வருகின்ற மே 1 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் டீசரும், முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றன. அடுத்தது இந்த படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wishing the path breaking and contemporary @karthiksubbaraj sir a wonderful birthday and all Love and Laughter ♥️

Wishes from team #Retro#HBDKarthikSubbaraj#RetroFromMay1 #LoveLaughterWar@Suriya_Offl #Jyotika @hegdepooja @Music_Santhosh @prakashraaj @C_I_N_E_M_A_Apic.twitter.com/bpaymxGmSH

— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 19, 2025

இந்நிலையில் இன்று (மார்ச் 19) இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ரெட்ரோ படக்குழு ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இரண்டாவது பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article