ARTICLE AD BOX
குவைத்: சரியாக தூங்கவில்லை என்றால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் என்று குவைத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. DDI என்னும் ஆய்வு மையம் 227 பேரை 24 மணி நேரம் விழித்திருக்க வைத்தனர். அதற்கு பின் பரிசோதித்து பார்த்ததில் இவர்களின் உடலில் Non-classical Monocytes என்ற வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரித்ததை கண்டறிந்தனர். சரியாக தூங்காதவர்களுக்கு இந்த செல்கள் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்திக்கான இந்த செல்கள் உடலில் நோய் இருக்கும் போது பெருகி நோய்க்கு எதிராக வினைபுரிய வேண்டும். ஆனால் இவை சாதாரண நேரத்தில் அதிகரித்தால் வயிற்று வலி முதல் புற்று நோய் வரை பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வேலை நேரமும், சூழலும் தொடர்ந்து மாறுவது அதிக நேரம் கணினி உள்ளிட்ட திரைகளை பார்ப்பது ஆகியவற்றால் தூக்கமின்மை பிரச்சனை அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
The post சரியாக தூங்கவில்லை என்றால் பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்: குவைத் ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.