ARTICLE AD BOX
Published : 06 Mar 2025 04:16 PM
Last Updated : 06 Mar 2025 04:16 PM
‘பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால்...’ - ஹமாஸுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

வாஷிங்கடன்: மீதமுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், அழிவைச் சந்திக்க நேரிடும் என்று ஹமாஸ் குழுவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்ரூத் சமூக வலை பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “ஷாலோம் ஹமாஸ் என்றால் ‘ஹலோ’ அல்லது ‘குட்பை’ என்று அர்த்தம். விருப்பத்தை நீங்களே தேர்வு செய்யலாம். இப்போதே உங்களிடம் மீதமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதேபோல் உங்களால் கொல்லப்பட்ட அனைவரின் உடல்களையும் உடனடியாக ஒப்படைக்கவேண்டும். மனநிலை பிறழ்ந்த நோயாளிகள் தான் உடல்களை தங்களுடன் வைத்திருப்பர். நீங்களும் மனநிலை பிறழ்ந்த நோயாளிகள்தான். அனைத்தையும் முடிக்க தேவையான எல்லா உதவிகளையும் நான் இஸ்ரேலுக்கு அனுப்புகிறேன். நான் கூறியபடி நீங்கள் செய்யாவிட்டால், ஹமாஸ் குழுவில் ஒருவர்கூட பாதுகாப்பாக இருக்கமுடியாது
உங்களால் வாழ்க்கை சீரழிக்கப்பட்ட உங்களின் முன்னாள் பிணைக்கைதிகளை நான் இப்போது தான் சந்தித்தேன். இது உங்களுக்கான இறுதி எச்சரிக்கை! . காசா மக்களைப் பொறுத்தவரை உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது. ஹமாஸ்கள் காசாவை விட்டு வெளியேறும் நேரம் இது. நீங்கள் யாரையும் பிணைக்கைதிகளாக வைத்திருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நீங்கள் கொல்லப்படுவீர்கள். சிறந்த முடிவை எடுங்கள். இப்போதே பிணைக்கைதிகளை விடுதலை செய்யுங்கள் அல்லது அதற்காக பின்னர் கூலி கொடுக்க வேண்டியது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி தாக்குதலில் பிடித்துச் செல்லப்பட்ட மீதமுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்கா விட்டால், நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், பிணைக் கைதிகள் விவகாரங்களுக்கான சிறப்பு தூதர் ஆடம் போஹ்லர், முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ்களுடன் அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியது என்பதை உறுதி செய்த பின்பே அதிபர் ட்ரம்ப் இவ்வாறு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பேச்சுவார்த்தை குறித்து நெதன்யாகுவுடன் முன்கூட்டியே விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகையும், இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளன.
ஹமாஸ்வசம் மீதமுள்ள பிணைக்கைதிகளில் ஐந்து அமெரிக்கர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களில் நான்கு பேர் உயிரிழந்திருக்கலாம், ஒருவர் மட்டுமே உயிருடன் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஹமாஸ் எதிர்வினை: பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் என்பது, காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கும், காசா மக்கள் மீதான முற்றுகையை, பட்டினியைத் தீவிரப்படுத்த முயலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவு அளிப்பதேயாகும் என்று தெரிவித்துள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- புதிய வரி விதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு இல்லை; மோடியிடம் தெளிவுபடுத்திவிட்டேன்: ட்ரம்ப் அறிவிப்பு
- பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம்
- அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பிடம் கனடா புகார்
- ‘அமெரிக்கா போரை விரும்பினால் நாங்களும் தயார்’ - வரி விதிப்பு விவகாரத்தில் ட்ரம்புக்கு சீனா பதிலடி