சமைக்கும் முன் காய்கறிகளை சுத்தம் செய்யும்முறை தெரியுமா?

3 days ago
ARTICLE AD BOX

மது மாடித்தோட்டத்தில் அல்லது கிச்சன் கார்டனில், இயற்கை உரம், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பூச்சி விரட்டி போன்றவற்றை உபயோகித்து உற்பத்தி செய்யப்படும் கீரை, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சமைக்கும் முன் தண்ணீரில் மேம்போக்காக ஒரு முறை தேய்த்துக் கழுவிய பின் சமைக்க எடுத்துக்கொள்ளலாம். வெளியில் மார்க்கெட் மற்றும் மால் போன்ற இடங்களிலிருந்து வாங்கி வரும் காய்களை கூடுதல் சிரத்தையுடன் கழுவி எடுப்பது ஆரோக்கியம் தரும். அதற்கான 10 ஆலோசனைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

1.குளிர்ந்த, ஓடும் நீரில் கழுவுதல்: குழாயை திறந்து விட்டு ரன்னிங் வாட்டரில் காய்களைக் கழுவும்போது அவற்றின் மேல் பரப்பில் உள்ள அழுக்குகள் மற்றும் களிமண் போன்ற அசுத்தங்கள் நீங்கிவிடும். இலைக் காய்கறிகளான லெட்டூஸ் மற்றும் பசலைக் கீரை போன்றவற்றை சுத்தம் செய்ய இந்த முறை நன்கு பயன்படும்.

2.உப்பு நீரில் மூழ்க வைத்து கழுவுதல்: ஒரு கோப்பையில் உப்பு கலந்த நீரை ஊற்றி அதில் காய்களை பத்து நிமிடம் மூழ்குமாறு வைத்திருந்து பின் கழுவலாம். உப்பு, காயில் உள்ள அழுக்குகள் கரைந்து வெளியேற உதவும். மேலும் காயில் உள்ள சிறு சிறு பூச்சிகளைக் கொல்லவும் செய்யும்.

3.வினிகர் கலந்த நீரில் மூழ்க வைத்து கழுவுதல்:

மூன்று பங்கு நீரில் ஒரு பங்கு வினிகர் கலந்து அந்த நீரில் காய்கறிகளை 15 நிமிடம் மூழ்க வைத்துப் பின் கழுவலாம். வினிகரில் உள்ள ஆன்டி பாக்டீரியல் குணமானது காயில் உள்ள பூச்சிகளையும் பாக்டீரியாக்களையும் நீக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
அசத்தலான அரைக்கீரைக் கூட்டும், எலும்புகளை பலப்படுத்தும் ராகி பணியாரமும்!

Do you know how to clean vegetables before cooking?

4.பேக்கிங் சோடா கரைசலில் காய்களை கழுவுதல்:

ஒரு கோப்பையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைப்போட்டு கரைக்கவும். அதில் காய்களைப் போட்டு பத்து நிமிடம் வைத்திருக்கவும். பிறகு காய்களைக் கழுவும்போது  அவற்றின் மேற்பரப்பில் உள்ள அசுத்தங்கள் மற்றும் புழு பூச்சிகள் அகன்றுவிடும்.

5.கீரைகளை கழுவும் முன் சுத்தப்படுத்துதல்:

கீரையில் உள்ள நிறம் மாறிய இலைகளையும் உடைந்த தண்டுகளையும் கவனித்துப்பார்த்து நீக்கிவிடுதல் நலம். அதிகமான அழுக்கும் பாக்டீரியாக்களும் அங்குதான் நிறைந்திருக்கும்.

6.கொலண்டரி (Colander)ல் போட்டு சுத்தப்படுத்துதல்:

காலே லெட்டூஸ் போன்ற கீரை வகைகளை, அடிப்பகுதியில் சிறு சிறு துளைகள் உள்ள பாத்திரத்தில் போட்டு ரன்னிங் வாட்டரில் கழுவும்போது கீரையில் உள்ள மண் உள்ளிட்ட அசுத்தங்கள் யாவும் துளைகள் வழியே வெளியேறிவிடும். கொலண்டரை குலுக்கிவிட்டு அசுத்தங்கள் அனைத்தும் நீங்கி விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

7.வெஜிடபிள் பிரஷ் வைத்து சுத்தப்படுத்துதல்:

புரோகொலி, போக் சோய் போன்ற வலுவான பிளவுகள் கொண்ட காய்களை வெஜிடபிள் பிரஷ் உதவியுடன்  அதிக கவனம் செலுத்தி மெதுவாக சுத்தப்படுத்துதல் அவசியம். இடுக்குகளில் அடைந்திருக்கும் அழுக்குகளையும் பூச்சிகளையும் முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டதை உறுதிப்படுத்திக்கொள்வதும் அவசியம்.

8.ஒன்றிற்கு மேற்பட்ட முறை கழுவியெடுத்தல்:

அதிக அசுத்தம் நிறைந்த காய்களை பலமுறை கழுவி  சுத்தப்படுத்துதல் அதிகப்படியான அசுத்தங்களை  நீக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
சூப்பர் சுவையில் கிரீன் மசாலா சுண்டல் - கருப்பு எள் இட்லி பொடி செய்யலாமா?

Do you know how to clean vegetables before cooking?

9.உலர்த்தி எடுத்தல்:

சுத்தப்படுத்திய பின் காய்களை காற்றாட போட்டு வைத்து உலரச் செய்யலாம். கீரைகளை சாலட் ஸ்பின்னரில் போட்டு உலர்த்தி எடுக்கலாம். இப்படி செய்வதால் அவைகளை நீண்ட நேரம் ஃபிரஷ்ஷாக இருக்கவைக்கலாம்.

 10.குளிர் சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தல்: 

சுத்தப்படுத்தி உலரச்செய்த காய்கறிகளை காற்றுப்புகாத டப்பாக்கள் அல்லது ஜிப் லாக் பைகளில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பதன் மூலம் அவைகளை அசுத்தமாகமலும் ஃபிரஷ்ஷாகவும் வைத்து உபயோகிக்கலாம்.

Read Entire Article