ARTICLE AD BOX
பேராசிரியை ஒருவருடன் மாணவர் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம், புதுக்காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜான் ஜெபராஜ். இவரின் மனைவி சீலியா கரோலின் (வயது 27).
இதையும் படிங்க: அசிங்கமா கண்டக்டர் திட்டுறாரு.. புகார் சொன்ன மாணவன்.. அதிரடி காட்டிய அமைச்சர் சிவசங்கர்.!
இவர் பெரம்பலூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 3 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது.
இதனிடையே, கடந்த ஜன.24 அன்று கல்லூரிக்கு சென்ற கரோலின், பின் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் மனைவியை பல இடங்களில் ஜெபராஜ் தேடிப்பார்த்தும் பலனில்லை.
மனைவி மாயம்
இதனையடுத்து, மனைவி மாயமானதாக ஜான் ஜெபராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.
அதிர்ச்சி தகவல் அம்பலம்
விசாரணையில், சீலியா கரோலினுடன், அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் பயின்று வரும் 20 வயது மாணவர் நெருங்கி பழகி வந்தது தெரியவந்தது.
இதனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டில் இருந்து வெளியேறி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கும் நிலையில், இருவரும் திருமண எண்ணத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
பெண்ணின் கணவரும், அவரின் குழந்தையும் பேராசிரியையின் செயலால் பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது காவல்துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சமயபுரம் பக்தர்களே உஷார்.! பாதயாத்திரை, இறுதி யாத்திரையாக மாறிய சோகம்.!