மகள் பிறந்த அதிர்ஷ்டம் – 3 மாசத்துல ஜாகுவார் கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா!

2 hours ago
ARTICLE AD BOX

Ishwarya Bhaskar Buy A Brand New Jaquar Car : மகள் வந்த அதிர்ஷ்டம் புதிதாக சொகுசு கார் ஒன்றை எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா வாங்கியுள்ளார்.

புதிதாக ஜாகுவார் கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா

Ishwarya Bhaskar Buy A Brand New Jaquar Car : கடந்த ஆண்டு தீபாவளி நாளன்று எம்.எஸ்.பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகீரா என்று பெயர் வைத்துள்ளனர். அதனை எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா தாய்மாமன் என்ற முறையில் தனது மார்பில் அகீரா என்று டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும் அகீரா பிறந்து சில மாதங்களில் ஐஸ்வர்யா சொகுசு கார் ஒன்றை புதிதாக வாங்கியிருக்கிறார்.

புதிதாக ஜாகுவார் கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா

இப்போது புதிதாக கார் வாங்கினால் அதில் மகன், மகள் அல்லது மனைவியின் பாதங்களை காரில் பதிக்கும் புதிய டிரெண்டை பலரும் விரும்பி வருகின்றனர். அதனை தான் ஐஸ்வர்யாவும் தனது புதிய காரில் செய்துள்ளார். மகளின் பாதங்களை காரில் பதித்துள்ளார். ஐஸ்வர்யா பாஸ்கர் ஒரு டப்பிங் கலைஞர். இவர் அகுல் சுதாகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

புதிதாக ஜாகுவார் கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா

எப்போது இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தனது காதல் திருமண வாழக்கைக்கு பிறகு கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டவர் தான் எம்.எஸ்.பாஸ்கர். சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்திருக்கிறார். அவர் மட்டுமின்றி அவரது மகனும் சினிமாவில் நடித்து வருகிறார். 96 என்ற படத்தில் இளம் வயது விஜய் சேதுபதி ரோலில் நடித்திருந்தார். இதுதான் ஆதித்யா பாஸ்கரின் முதல் படம். இதே போன்று தான் எம்.எஸ்.பாஸ்கரின் மகளும் சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார்.

புதிதாக ஜாகுவார் கார் வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா

இந்த நிலையில் தான் ஐஸ்வர்யா மற்றும் அகுல் சுதாகர் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தான் வீட்டிற்கு மகாலட்சுமி, செல்வ லட்சுமி வந்த நேரம் சில மாதங்களிலேயே புதிதாக ஜாக்குவார் காரை வாங்கியுள்ளார். அந்த காரில் குழந்தையின் கால் பாதம் இருப்பது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Read Entire Article