சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

3 days ago
ARTICLE AD BOX

மயிலாடுதுறை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

புறத்தொடர்பு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

Advertisment
Advertisement

சம்பளம்: ரூ. 10,592

வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 42 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mayiladuthurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 5வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மன்னம்பந்தல், மயிலாடுதுறை - 609305 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.02.2025

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Read Entire Article