சனிப்பெயர்ச்சி: சொல்லி அடிக்கும் மேஷ ராசி.. தொழில், வீடு, நிலம் அதிர்ஷ்ட பலன்கள் கொட்டும்

4 days ago
ARTICLE AD BOX

சனிப்பெயர்ச்சி: சொல்லி அடிக்கும் மேஷ ராசி.. தொழில், வீடு, நிலம் அதிர்ஷ்ட பலன்கள் கொட்டும்

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

Sani Peyarchi 2025: மார்ச் மாதத்தில் சனிப்பெயர்ச்சியானது நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு - கேது பெயர்ச்சி ஆகியவை நிகழ்வுள்ளன. முதலில் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. மார்ச் 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் இந்த நிலையில் தொடரவுள்ளார்.

Sanipeyarchi 2025 Mesham 2025

சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்பார்கள். கிரகங்களில் சனி பகவான் மிகவும் பலம் வாய்ந்தது. தவறுகளுக்கு தண்டனை கொடுக்கும் நீதிமானாகவும் சனி பகவான் உள்ளார். சனி பகவானின் பார்வை பலம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் 12 ஆம் இடமான அயன, சயன, போக, விரய ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். மே 19 ஆம் தேதி வரை சுமார் 51 நாட்கள் மீனத்தில் சனியுடன் ராகு இருக்கப் போகிறார்.

மேலும் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களும் மீனத்தில் உள்ளன. சுமார் 50 நாட்களுக்கு இந்த ஐந்து கிரகங்களும் பயணிக்கவுள்ளன. சனி - ராகு இணைந்து பயணிக்கும் இந்த காலத்தில் காலநிலை மாற்றம், இயற்கை சீற்றம் போன்ற ஏராளமான பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்புள்ளது.

கிரகங்களில் ஒரு ராசியில் அதிகளவு இருப்பது சனி கிரகம் தான். 12வது இடம் என்பது குரு பகவானின் வீடு. இதனால் பாதிப்புகள் இருந்தாலும் அதன் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேஷம் ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது.

இதனால் மேஷம் ராசியினர் பெரியளவு பயப்பட தேவையில்லை. பெரும்பாலானோருக்கு ஏழரை சனியின் போதுதான் திருமணம், வேலை வாய்ப்பு, தொழில் தொடக்கம், வெளிநாடு யோகம் ஆகியவை கிடைப்பதற்கான யோகம் கிடைக்கும். அந்த வகையில் மேஷம் ராசியினருக்கு புதிதாக தொழில் தொடங்க வேலை வாய்ப்புள்ளது.

பணிச்சுமை அதிகரிக்கும். கடன் அதிகரிக்கும். வீடு, நிலம் ஆகியவற்றில் முதலீடு செய்வார்கள். மருத்துவ செலவும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. யாரையும் நம்பி உங்களின் தனிப்பட்ட தகவல்களை கொடுத்துவிட வேண்டாம். உங்கள் உடல்நலத்தில் கவனம் தேவை. அஜீரணம், வாய்வு, தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படும்.

தூக்கமின்மையால் கடுமையான சோர்வு ஏற்படும். சிலருக்கு கால் வலி ஏற்படலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. இருப்பினும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். இடமாற்றம் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. கல்வியில் மந்தமான நிலை இருக்கும். வண்டி, வாகனத்தில் கவனம் தேவை.

இரண்டாவது சுற்றில் இருப்பவர்களுக்கு வீடு, நிலம், வாகனம் ஆகியவை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. வார்த்தைகளில் கவனம் தேவை. எதிலும் கோபத்தை தவிர்த்து நிதானமாக முடிவு எடுப்பது நல்லது. இந்த காலத்தில் கணவன் - மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கத்தில் உள்ள எல்லைக்கர ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவதால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

More From
Prev
Next
English summary
Saturn transit will take place in March. This astrological article details the benefits of this transit of Saturn for Aries and the things to be aware of.
Read Entire Article