சச்சினின் சாதனையை சைலண்டாக முறியடித்த ரோஹித் சர்மா

5 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெரிய இன்னிங்சை வெளிப்படுத்தாவிட்டாலும், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உலக சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 15 பந்துகளில் 20 ரன்கள் அடித்த ரோஹித், 3 ஃபோர், ஒரு சிக்ஸர் அடித்து ஷாஹீன் அஃப்ரிடியின் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்சில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓப்பனர் என்ற முறையில 9000 ரன் எடுத்த ரோஹித், வேகமாக இந்த சாதனையை படைத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெறுமையைப் படைத்துள்ளார். இந்திய இன்னிங்ஸில் முதல் ஓவர்லேயே ஓப்பனர் என்ற முறையில 9000 ரன் கடந்த ரோஹித், நசீம் ஷா போட்ட அடுத்த ஓவரில் ஃபோரும், சிக்ஸரும் அடித்து நம்பிக்கை கொடுத்தார்.

ஓப்பனர் என்ற முறையில 181 இன்னிங்ஸ்களில் ரோஹித் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி உள்ளார். 197 இன்னிங்ஸ்களில் 9000 ரன் எடுத்த பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ரோஹித் இன்று முறியடித்துள்ளார். ஓப்பனராக 231 இன்னிங்ஸ்களில் 9000 ரன் எடுத்த சௌரவ் கங்குலி இந்த சாதனையில் 3வது இடத்தில் உள்ளார். ஆரம்பத்தில் மிடில் ஆர்டரில் விளையாடி வந்த ரோஹித்தை 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபில் தோனிதான் ஓப்பனராக ஆட வைத்தார். அதன் பின்னர் அந்த இடம் ரோஹித்துக்கு நிரந்தரமாகிவிட்டது.

சாம்பியன்ஸ் ட்ராஃபில் பங்களாதேஷுக்கு எதிராக நடந்த முதல் மேட்ச்சில் ஒருநாள் கரியரில் 11000 ரன் எடுத்த ரோஹித், வேகமாக இந்த சாதனையை செய்த 2வது பேட்ஸ்மேன் என்ற பெறுமையைப் பெற்றார். விராட் கோலிதான் இந்த சாதனையை செய்த முதல் நபர். 269 மேட்ச்களில் 261 இன்னிங்ஸ் விளையாடி ரோஹித் 11000 ரன்கள் எடுத்தார். 222 மேட்ச்களில் 11000 ரன் எடுத்த விராட் கோலிதான் மிகவும் கம்மியான போட்டிகளில் இந்த சாதனையை படைத்த பேட்ஸ்மேன். ஒருநாள் போட்டிகளில் 3 டபுள் செஞ்சுரி அடித்த முதல் ஆளான ரோஹித் மொத்தமாக 32 சதமும், 57 அரை சதமும் அடித்துள்ளார்.

சமீபத்தல் சரியில்லாத ஃபார்ம் காரணமாக ரசிகர்கள் பலரும் ரோஹித்தை குறை கூறி வந்தனர். நியூசிலாந்துக்கு எதிராவும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நடந்த டெஸ்ட் சீரிஸ்ல் அவர் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் சரியா விளையாடாத ரோஹித், அடுத்த ஒருநாள் போட்டியில் சதம் அடித்து ஃபார்முக்கு திரும்பினார். ஆனால் சாம்பியன்ஸ் ட்ராஃபின் முதல் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக 41 ரன் அடித்த ரோஹித், இன்று 15 பந்துகளில் 20 ரன் அடித்து ஆட்டம் இழந்தார்.

Read Entire Article