கோவையில் இன்று ‘உலகத் தாய்மொழி நாள்’ விழா: அமைச்சர் பங்கேற்கிறார்

4 days ago
ARTICLE AD BOX

சென்னை: உலகத் தாய்மொழி நாள் 21ம் தேதி (இன்று) கோயம்புத்தூர், ஈச்சனாரி, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10.30 மணி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவில் தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் அவ்வை அருள் வரவேற்புரை ஆற்றுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன் முன்னிலை வகிக்கிறார். கோயம்புத்தூர் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் உள்பட பலர் சிறப்புரையாற்றுகின்றனர்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 2023ம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச்சங்க இலக்கண, இலக்கிய, மொழியியல் விருதுகளை வழங்கி விழா பேருரையாற்றுகிறார். விழாவில் எம்பி, எம்எல்ஏக்கள், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

The post கோவையில் இன்று ‘உலகத் தாய்மொழி நாள்’ விழா: அமைச்சர் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Read Entire Article