கோவை மக்களுக்கு குஷிதான்.. பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

4 days ago
ARTICLE AD BOX

கோவை மக்களுக்கு குஷிதான்.. பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

Coimbatore
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாநகரில் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை இன்று அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து ஆம்னி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு.

கோவையில் அரசு பேருந்துகளுக்கு காந்திபுரம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையங்கள் உள்ளன. தனியார் பேருந்துகளுக்கு கோவை மாநகராட்சி - மத்திய மண்டலத்தில் வார்டு 48ல் ஜி.பி. சிக்னல் அருகே மேம்பால பகுதி அருகே சுமார் 1.5 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது.

Coimbatore bus stand

அதிகரித்து வரும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை, பயணிகள் எண்ணிக்கை மற்றும் மற்ற அவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்து நிலையத்தை ரூ.3.68 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சி தரம் உயர்த்த நடவடிக்கைகள் எடுத்தது. காந்திபுரம் பகுதியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன.

ரூ.3.68 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 40 முதல் 50 பேருந்துகள் நிறுத்த முடியும். பேருந்து ஓட்டுநர்கள், பயணிகளுக்கு, குறிப்பாக குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு தேவையான வசதிகள் இந்த வளாகத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பாலூட்டும் அறை, காத்திருப்போர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, கட்டண கழிப்பிடம் மற்றும் 32 கடைகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்த பேருந்து நிலையம் இன்று திறக்கப்பட்டது.

Coimbatore bus stand

இதை இன்று திறந்த வைக்கவும் கோவை மாநகராட்சி மற்றும் கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் ரூ. 30.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 15 புதிய திட்ட பணிகளை திறந்து வைக்கவும், ரூ.271 கோடி மதிப்பீட்டில் 1028 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கோவை வந்தார்.

கோவையின் பொறுப்பு அமைச்சரும் தமிழக மின்சார துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி உடன் இணைந்து, அமைச்சர் கே.என்.நேரு இந்த வளாகத்தை திறந்து வைத்தார். அத்துடன் முடிவற்ற புதிய திட்ட பணிகளை திறந்து வைத்தார், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அறசு கொறடா கா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More From
Prev
Next
English summary
Minister KN Nehru inaugurated the Omni Bus Stand located in Gandhipuram area of ​​Coimbatore city today, after the renovation work was completed.
Read Entire Article