கோவை: கணவன் - மனைவி சண்டையில் விபரீதம்; மனைவியை சுட்டுக்கொன்று, கணவர் தற்கொலை.!

3 hours ago
ARTICLE AD BOX

 

கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, ஈரெட்டுக்குளம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ண குமார் (வயது 52). இவர் விவசாயம், சுற்றுலாக்களுக்கு மக்களை அழைத்துச்செல்லும் தொழில் செய்து வந்துள்ளார். கிருஷ்ண குமாரின் மனைவி சங்கீதா (வயது 44). தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். 

இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பட்டணம், புதூர் பகுதியில் வசித்து வண்ணத்துள்ளனர். சங்கீதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியே வசித்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க: சிக்கன் ஸ்டைப் வித் மயோனைஸ் சாப்பிட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. 30 நாட்களாக பரிதவித்த துயரம்..!

மனைவி கொலை, கணவர் தற்கொலை

இந்நிலையில், நேற்று கேரளாவில் இருந்து கோவை வீட்டுக்கு வந்த கிருஷ்ண குமார், மனைவியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது, குழந்தைகளும் பள்ளிக்கு சென்றுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த தம்பதியில், கிருஷ்ணகுமார் ஆத்திரத்தில் சங்கீதாவை சுட்டுக்கொலை செய்து காரில் தப்பிச் சென்றார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நேரில் வந்த அதிகாரிகள் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கிருஷ்ணகுமார் குறித்து விசாரிக்கையில், அவர் சொந்த ஊர் சென்று தன்னைத்தனே சுட்டுக் கொலை செய்துகொண்டது தெரியவந்தது. 

இதையும் படிங்க: டேட்டிங் செயலியால் விபரீதம்.. கோவை சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பகீர் பின்னணி.!

Read Entire Article