மாரடைப்பால் உயிரிழந்த தாய்; துக்கத்திலும் தேர்வெழுதிய அரசுப்பள்ளி மாணவர்.!

2 hours ago
ARTICLE AD BOX

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர், அண்ணா நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரின் மனைவி சுபலட்சுமி. தம்பதிகளுக்கு சுனில் குமார் என்ற 17 வயதுடையா மகன், யுவாஸினி என்ற 14 வயது மகள் இருக்கின்றனர். இருவரும் பள்ளியில் பனிரெண்டு மாற்று 9 ம் வகுப்புகள் முறையே பயின்று வருகின்றனர். 

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்துவிட, சுபலட்சுமியின் பராமரிப்பில் குழந்தைகள் இருந்துள்ளனர். மேலும், அவர் இதய நோயின் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலை மோசமானதால் கடந்த 15 நாட்களாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இதையும் படிங்க: 3 வயது சிறுவனின் மூச்சுக்குழாய்யில் சிக்கிய எல்இடி பல்பு.. நெல்லை மருத்துவர்கள் சாதனை.!

வருத்தத்தில் தேர்வில் உறுதி

இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில், உடல்நலம் மோசமாகி உயிரிழந்தார். இதனிடையே, பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த சுனிலுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. தாய் இறந்த நிலையிலும், தேர்வை எழுதிய மாணவர், பின் மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்தார். 

அவருடன் சுனிலின் ஆசிரியர்கள், மாணவர்களுடன் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். தாயின் மரணத்திற்கு தேரெழுதிய பின்னர் சுனில் இறுதிச்சடங்கு செய்தார். 

இதையும் படிங்க: சறுக்கல் விளையாட்டில் சோகம்.. சிறுமியின் விரல் துண்டானது.. பராமரிப்பில்லாத பூங்காவில் துயரம்.!

Read Entire Article