கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா.. சத்குரு அப்படி சொன்னதுமே நெகிழ்ந்த அமித்ஷா

3 hours ago
ARTICLE AD BOX

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா.. சத்குரு அப்படி சொன்னதுமே நெகிழ்ந்த அமித்ஷா

Coimbatore
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றுள்ள மகா சிவராத்திரி விழாவில் பேசிய சத்குரு, நம்முடைய இப்போதைய உள்துறை அமைச்சர் செய்திருக்கிற விஷயம் பார்த்தீங்கன்னா.. ஏதோ ஒரு விதத்தில் அப்போது சர்தார் வல்லபாய் படேல் செய்ததுடைய தன்மையாக இருக்கிறது. மறுபடியும் நம்ம நாட்டை இவர் ஒன்றாக கொண்டு வந்துள்ளார் என்று அமித்ஷாவை வெகுவாக பாராட்டினார்.

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆகியோர் பங்கேற்றனர்.

Coimbatore Maha Shivratri Amit Shah

இந்த விழாவில் சத்குரு பேசுகையில், "எல்லாருக்கும் வணக்கம்.. ஒவ்வொரு அரசாங்கத்திலும் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள்.. ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு ஒரு அமைச்சர் இருந்தார்.. அவர் உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் இல்லாமல் நம்ம நாடு ஒரு நாடாக ஆகியிருக்காது.. யாரை பற்றி பேசுகிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.. அவர் தான் சர்தார் படேல்.. அந்த சமயத்தில் இந்த நாட்டை ஒன்றாக்க செய்தசெயல் மிகவும் மகத்துவம் வாய்ந்த செயல்.. இல்லாவிட்டால் நாம் ஒரு நாடாக இருந்திருக்க மாட்டோம்..

இந்தியா பாகிஸ்தான் பிரிக்கிற அந்த துரதிஷ்டவசமான சம்பவம் நடந்திருந்தாலும்.. மீதி நாட்டை ஒன்றாக்க பல விஷயங்கள் நடந்தது.. அரசியல் உள்பட பல முன்னேற்றங்கள் நடந்திருக்கிறது. அரசியல் அமைப்பில் சின்ன பிரச்சனைகள் கூட நடந்திருக்கிறது. நம்முடைய நாடு ஒரு நாடாக இருந்த போதிலும், பல விதங்களில் நாட்டின் சில பகுதிகள் உண்மையாகவே நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தது.. ஆளுகிற ஆட்சியில் இல்லாமல் இருந்துச்சு..

நம்முடைய இப்போதைய உள்துறை அமைச்சர் செய்திருக்கிற விஷயம் பார்த்தீங்கன்னா.. ஏதோ ஒரு விதத்தில் அப்போது சர்தார் வல்லபாய் படேல் செய்ததுடைய தன்மையாக இருக்கிறது. மறுபடியும் நம்ம நாட்டை இவர் ஒன்றாக கொண்டு வந்துள்ளார். முன்பு ஒவ்வொரு மாதமும் ஒரு இடத்தில் குண்டுவெடிப்பு நடக்கும்.. அடுத்து ஹைதராபாத் , மும்பை, புனே, பெங்களூர் என நடக்கும்... கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாதிரி எந்த ஒரு சம்பவத்தையும் நீங்கள் கேள்விப்படவில்லை.. இதை செயல்படுத்தி இருக்கிற நம்ம பாதுகாப்பு படையினர் மற்றும் இவர்களுக்கு தலைமை தாங்குகின்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியாக செயல்பட்டதால் பல விஷயங்கள் நடந்துள்ளது. ஒரு காலத்தில் தீவிரவாதிகள் கட்டுக்குள் இருந்த பகுதிகள் இப்போது நமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.. 2026க்குள் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திடும் என அவர் வாக்குறுதி எடுத்துள்ளார். இதைநிறைவேற்ற நாங்கள் எல்லாரும் உங்களுடன் இருக்கிறோம்.

நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசத்தை மறு ஒருங்கிணைப்பு செய்திருக்கிறார். வரலாற்று ரீதியாக நாம் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்துள்ளோம். யாரையும் குற்றம் சொல்லவில்லை. அன்றைய சூழல் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் 370வது சட்டப்பிரிவை நீக்கி, நம் நாட்டின் இயல்பான ஒரு பகுதியாக காஷ்மீர் மாற்றியிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. காஷ்மீர் சுற்றுலாத் தளமாக மாறியிருக்கிறது. அங்கு கோல்ப் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்" இவ்வாறு அமித்ஷா குறித்து சத்குரு பாராட்டி பேசினார்.

More From
Prev
Next
English summary
Speaking at the Maha Shivaratri festival held at the Isha Yoga Center in Coimbatore, Sadhguru praised Amit Shah, comparing him to Vallabhbhai Patel.
Read Entire Article