ARTICLE AD BOX
இயக்குனர் செல்வராகவன் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

Selvaraghavan Birthday : இயக்குனர் செல்வராகவன், காதல் கொண்டேன் திரைப்படம் தொடங்கி, 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என தன் படங்களில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தார்.
அதேபோல் தேவையற்ற ஆபாச காட்சிகள் மற்றும் வசனங்களை தவிர்த்தார். என்ன கதை யோசித்தாரோ அதன்படி படம் அமையவில்லை என்றாலோ அல்லது நடிகர்கள் ஒத்துழைக்கவில்லை என்றாலோ அப்படத்தையே கைவிட்டுவிடும் கராரான டைரக்டர் தான் செல்வா.

அவரின் இந்த துணிச்சல் மிகு செயல்களாலேயே ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டார் செல்வராகவன். மயக்கம் என்ன படத்திற்கு முன் நடிகர் கமல்ஹாசன் உடன் செல்வராகவன் கைகோர்ப்பதாக இருந்தது. அதுவும் கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தை செல்வராகவன் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சில காரணங்களால் அப்படத்தை இயக்குவதில் இருந்து பின்வாங்கிவிட்டார். இதேபோல் சிம்புவை வைத்து அவர் இயக்குவதாக இருந்த கான் படமும், விக்ரமுடனான சிந்துபாத் படமும் தொடக்கத்திலேயே நின்றுபோனது.
இதையும் படியுங்கள்... Selvaraghavan: விளங்கவே விளங்காது; யார் கிட்டையும் உதவி கேட்காதீங்க - தீர்க்க தரிசியாக மாறிய செல்வராகவன்!

இப்படி அடுத்தடுத்த படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டதால் அவர் கடும் அப்செட்டாகி சில ஆண்டுகள் சினிமாவை விட்டே விலகினார். மயக்கம் என்ன படம் இயக்கி 3 ஆண்டுகள் கழித்தே இரண்டாம் உலகம் படத்தை இயக்கினார். அப்படத்தின் ரிசல்ட் எதிர்பார்த்தபடி இல்லாததால் படம் இயக்குவதற்கு ரெஸ்ட் விட்டு புத்தகங்களுடன் நேரம் செலவிட தொடங்கினார். இதையடுத்து சூர்யாவை வைத்து கம்பேக் கொடுக்க நினைத்த செல்வா, அவரின் என்.ஜி.கே படத்தை இயக்கினார். ஆனால் அப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இதனால் இயக்குனர் செல்வராகவனுக்கு பிரேக் விட்டு நடிகராக அவதாரம் எடுத்தார் செல்வா. விஜய்யின் பீஸ்ட் படத்தில் சின்ன ரோலில் நடித்த இவர், பின்னர் சாணிக்காயிதம் படத்தில் டெரரான கதாபாத்திரத்தில் நடித்து தன்னுள் இருக்கும் நடிப்பு அசுரனை திரையில் காட்டினார். தற்போது பிசியான நடிகராக செல்வா வலம் வருகிறார். இதுதவிர அவர் லைன் அப்பில் 7ஜி ரெயின்போ காலனி 2, புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற படங்களும் உள்ளன.

இன்று தனுஷ் ஒரு தலைசிறந்த நடிகராக இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் செல்வராகவன் தான். முதல் படத்தில் இருந்தே ஒரு சிற்பியாக இருந்து தனுஷை செதுக்கியவர் செல்வா. இப்படி படம் இயக்குவதில் ஜீனியஸாக இருக்கும் செல்வராகவன் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி ரூ.50 கோடிக்கு மேல் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளாராம் செல்வராகவன். நடிகனாகவும் மவுசு கூடியதால் 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம் செல்வா.
இதையும் படியுங்கள்... செல்வராகவன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்; அப்படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?