கோபமாக கத்திய டிரம்ப்! பாதியில் வெளியேறிய ஜெலன்ஸ்கி! வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

2 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்க சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கும், டொனால்ட் டிரம்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் ஜெலன்ஸ்கி அவசரம், அவசரமாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். இதனால் அவர் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் கைகோர்த்துள்ளார்.  உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவது குறித்து அமெரிக்கா அதிகாரிகளும், ரஷ்யா அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இந்த பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மறுத்தார். 

உக்ரைன் போருக்கு இனி செலவு செய்ய தயாராக இல்லை என்றும் அமெரிக்கா செலவழித்த பணத்தை உக்ரைன் தர வேண்டும் எனவும் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்தார். மேலும் உக்ரைனில் உலகின் மொத்த அரிய வகை கனிமங்களில் 5% இருக்கும் நிலையில், பணத்துக்கு பதிலாக அந்த கனிமவளங்களை அமெரிக்காவுக்கு அளிக்க வேண்டும் எனவும் உக்ரைன் அதிபருக்கு டிரம்ப் நிபந்தனை விதித்தார்.

அதாவது கனிமங்கள் வர்த்தகத்தில், 50 சதவீத லாபத்தை அளிக்க வேண்டும் என்று டிரம்ப் உக்ரைனுக்கு நிபந்தனை விதித்தார். முதலில் இதற்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்து இருந்த நிலையில், அதன்பிறகு டிரம்பின் அழுத்ததிற்கு ஜெலன்ஸ்கி பணிந்தார். இந்த கனிமவளங்களை அமெரிக்கா வெட்டி எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார். 

வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப், ஜெலன்ஸ்கி இருவரும் சந்தித்த நிலையில், இப்போது இந்த சந்திப்பு சண்டையில்போய் முடிந்து உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது டிரம்ப், ஜெலன்ஸ்கி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இடையே நடந்த இந்த சந்திப்பு முதல் அரை மணி நேரம் அமைதியாகத் தான் நடந்தது.

பின்பு உக்ரைன் ரஷ்யா போர் குறித்து பேச ஆரம்பித்தவுடன் வாக்குவாதம் தொடங்கியது. அதாவது இந்த போர் குறித்து முதலில் பேசிய வான்ஸ், ''போரில் அமைதிக்கான பாதை மற்றும் செழிப்புக்கான பாதை ஒருவேளை ராஜதந்திரத்தில் ஈடுபடுவதுதான். அதிபர் டிரம்ப் அதைத் தான் செய்கிறார்'' என்றார். அப்போது திடீரென குறுக்கிட்ட ஜெலன்ஸ்கி, ''ஜே.டி., நீங்கள் என்ன வகையான ராஜதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? போர் தொடங்குவதற்கு முன்பு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது. அப்போது விளாடிமிர் புதினை யாரும் தடுக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

இதனால் டென்ஷனான ஜே.டி. வான்ஸ், ''அமெரிக்க நிர்வாகத்தை தாக்க வேண்டாம். எங்களுக்கு நீங்கள் ஏதும் சொல்ல வேண்டிய தேவை இல்லை. உங்களின் செயல்பாடு உக்ரைனையே அழித்து விடும். இது மோசமான செயல்பாடு'' என்று ஆவேசமாக கூறினார். இதற்கு பதிலடியாக பேசிய ஜெலன்ஸ்கி, ''போரின் போது, ​​அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. உங்களுக்கும் கூட. உங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்காதீர்கள். இப்போது நீங்கள் அதை உணரவில்லை. ஆனால் எதிர்காலத்தில் ரஷ்யாவால் ஆபத்தை நீங்கள் உணருவீர்கள்'' என்றார்.

அதுவரை பொறுமையாக இருந்த டொனால்ட் டிரம்ப் ஜெலன்ஸ்கின் பேச்சை பார்த்து மிகவும் கோபமடைந்தார். அப்போது பேசிய டிரம்ப், ''உக்ரனை இந்த அளவுக்கு மோசமாக மாற்றியது நீங்கள் தான். உங்களின் மோசமான செயல்பாடு பலகோடி மக்களின் உயிருடன் விளையாடுகிறது'' என்றார். 

அப்போது ஜெலன்ஸ்கி, ''நாங்கள் மக்கள் உயிருடன் விளையாடவில்லை. இந்த போரில் நாஙக்ள் தனித்து விடப்பட்டுள்ளோம். அதற்காக நன்றி சொல்கிறேன்'' என்றார். இதனால் டென்ஷனான டிரம்ப், ''நீங்கள் தனியாக இல்லை. அமெரிக்காவின் முன்னள் முட்டாள் ஜனாதிபதி மூலம் நாங்கள் உங்களுக்கு 350 பில்லியன் டாலர்களை வழங்கினோம். நாங்கள் உங்களுக்கு இராணுவ உபகரணங்களையும், நிறைய ஆதரவையும் வழங்கினோம். எங்கள் இராணுவ உபகரணங்கள் இல்லையென்றால், இந்த போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும். ரஷ்யா உங்களை எளிதில் வீழ்த்தி இருக்கும்'' என்று தெரிவித்தார்.

பின்னர் ஜெலன்ஸ்கி, ''தயவுசெய்து, நீங்கள் போரைப் பற்றி மிகவும் சத்தமாகப் பேசினால் அது சரியாகுமா'' என்றார். அதற்கு டிரம்ப், ''நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள். அடுத்த முறை அமைதியை விரும்பினால் இங்கு வாருங்கள்'' என்றார். இப்படியாக வாக்குவாதம் கடுமையான நிலையில், உகரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அவசரம், அவசரமாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். 
 

Read Entire Article