ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2025/03/01/bViFoFzDgmkVdW7Cr2qt.jpg)
கடினமான பயிற்சிகள் எதையும் மேற்கொள்ளாத சாதாரண செயல்பாடுகளை கொண்ட ஒருவருக்கு, ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்பட்ட புரோட்டீன் உட்கொள்ளல், ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8-1.0 கிராம் புரோட்டீன் போதுமானது.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/S0OBAp4udWWl2pMefrHn.jpg)
அதே நேரத்தில், புரோட்டீன் பவுடர்களில் இல்லாத வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை, இயற்கையான உயர்தர புரோட்டீன்கள் நிறைந்த சமநிலையான உணவின் மூலம் எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/zWQMkJ3YsfaFf1RBM65X.jpg)
கொழுப்பு குறைவான இறைச்சிகள், மீன், முட்டை, பால் பொருட்கள், பருப்பு வகைகள், நட்ஸ்கள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் உள்ளிட்ட சமநிலையான உணவை போதுமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கோழி, வான்கோழி, டோஃபு, கெட்டியான கிரேக்க தயிர், பயறு வகைகள், கொண்டைக்கடலை, குயினோவா மற்றும் பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் உயர்தர புரதத்தை கொண்டுள்ளன. மேலும் புரோட்டீன் பவுடர்களில் இல்லாத வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் இதன் மூலம் பெற முடியும்
/indian-express-tamil/media/media_files/2025/03/01/Kao0ZuPltIRt62VriguA.jpg)
அதிக செறிவூட்டப்பட்ட புரோட்டீனை, பொடிகளின் வடிவில் உட்கொள்வது சிறுநீரகங்களை சோர்வடையச் செய்யலாம். ஏனெனில், அவை யூரியா மூலம் அதிகப்படியான நைட்ரஜனை வெளியேற்ற கடினமாக இயங்க வேண்டியிருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/EKtDTePg6Z3FTsmtzbDz.jpg)
ஒரு புரோட்டீன் பவுடரைத் தேர்ந்தெடுக்கும் போது, அதன் தரம், செரிமானம் மற்றும் சாத்தியமான அழற்சி பண்புகள் போன்ற காரணிகளைக் கவனிக்க வேண்டியது அவசியம். லேபிள்கள், மூலப்பொருள் அடங்கிய பட்டியல் மற்றும் மூன்றாம் தரப்பு சோதனை மற்றும் சான்றிதழ்களைப் படிக்க வேண்டும்