கொடைக்கானல் வனப்பகுதியில் தீ வைத்தவர் கைது

3 days ago
ARTICLE AD BOX

கொடைக்கானல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் வெப்பம் காரணமாக மலைப்பகுதியில் புல்வெளிகள், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன.

இந்த நிலையில், கொடைக்கானல் பண்ணைக்காடு அருகே உள்ள ஜெரோனியம் வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தீப்பற்றியது. இதில் அங்குள்ள செடி, கொடிகள் கருகின. இதுகுறித்து வனச்சரகர் குமரேசன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தாண்டிக்குடியை சேர்ந்த சந்திரன் (வயது 46) என்பவர் வனப்பகுதிக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும்தனியார் பட்டா நிலங்களில் தீவைக்கும் போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்கூட்டியே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Read Entire Article