கொடிக்கம்பம் குறித்த ஐகோர்ட் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை; கொடிக்கம்பங்கள் குறித்து ஐகோர்ட் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு அரசமைப்புக்கு எதிரானது. ஒட்டுமொத்தமாக பொது இடங்களில் எங்குமே கொடிக்கம்பங்கள் வைக்கக் கூடாது என்பது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிப்பது, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் இயக்கங்கள் – போராட்டங்கள் நடத்தச் சொல்வது, மக்களிடையே பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மறுப்பது என்று பாதிக்கப்பட்ட மக்கள் போராடுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது வழக்கமாக உள்ளது. எனவே, உயர்நீதிமன்றம் 27.01.2025ல் தான் வழங்கிய கொடி மரங்கள் குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

The post கொடிக்கம்பம் குறித்த ஐகோர்ட் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சிபிஎம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article