ARTICLE AD BOX
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 49 வயது கூலி தொழிலாளி தனது 16 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் வசந்த்குமார், கோகுலபிரியா ஆகியோர் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 3 ஆண்டுகளாக சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக 3 முறை சிறுமியை கற்பழித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த்குமார் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் மகளிர் போலீசார் சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :