கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதியிடம் கமல் கோரிக்கை

3 days ago
ARTICLE AD BOX

சென்னை: இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) சார்பில் பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC – South Connect) சென்னை கிண்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், ‘‘தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவி மடுத்து, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளும் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. நான் சார்ந்திருக்கிற திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன். மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியோடு மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை வரி விதிப்பாகி விடுகிறது. மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் தமிழ்த்திரையுலகிற்கு நிவாரணமாக அமையும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘‘கமல்ஹாசன் அவர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலனை செய்யப்படும்’’ என்றார். மேலும், பனையூரில் திரைக்கலைஞர்களுக்கான குடியிருப்பு அமையவிருப்பதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பையும் வெளியிட்டார். அதற்கு மேடையிலேயே கமல்ஹாசன் தமிழ்த் திரையுலகம் சார்பாக தனது நன்றிகளை தெரிவித்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

Read Entire Article