ARTICLE AD BOX
சென்னை: ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கிறார் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ‘ஜெயிலர்’, ‘ஸ்த்ரீ 2’ என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், தமன்னா அவரது கேரவனில் நடந்த துயரம் குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், ‘‘நான் என் கேரவனில் இருக்கும்போது எனக்கு பிடிக்காத ஒன்று நடந்தது. அது கசப்பான அனுபவம். அதனால் மிகவும் மனம் உடைந்த என் கண்கள் குளமாகின. அந்த நேரத்தில் எனக்கு ஷூட்டிங் இருந்தது அதனால் என்னால் அந்த இடத்தில் அழ முடியாது. அப்போது நான் என்னிடம், இது ஒரு உணர்ச்சி மட்டும் தான். அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பின்னர் இந்தக் கடினமான உணர்ச்சியை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன். காரணம், அப்போது காமெடி காட்சியில் நான் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் உதவியது’’ என்று கூறியுள்ளார்.