ARTICLE AD BOX
சென்னை: முற்றிலும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. இந்த புதிய தோற்றத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், ‘சமந்தா ஹாலிவுட்டுக்கு போகிறாரா?’, ‘எந்த ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்’ என்றெல்லாம் கேட்கத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் பாலிவுட் சென்று அங்கு வெப்சீரிஸ்களில் நடித்து வரும் சமந்தா, இந்தி படமொன்றிலும் நடிக்கிறார். இதற்கிடையில் அவர் ஹாலிவுட்டுக்கும் செல்வதாக இந்த புகைப்படம் மூலம் தகவல் பரவ, அது உண்மையில்லை என்றும் ஆங்கில இதழுக்காக இதுபோன்ற ஹேர் ஸ்டைலுடன் அவர் காட்சியளிப்பதாக சமந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.