வெற்றி ஓட்டு முத்தையாவா மாத்துங்க: கவுண்டமணி கல கல

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை: கடந்த 2016ல் வெளியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தை தொடர்ந்து கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஒத்த ஓட்டு முத்தையா’. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை கே.பாக்யராஜ், பி.வாசு, கே.ராஜன் இணைந்து வெளியிட்டனர். சாய் ராஜகோபால் இயக்கத்தில் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சிங்கமுத்து, ரவிமரியா, வையாபுரி நடித்துள்ளனர். சா.காத்தவராயன் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். சினி கிராஃப்ட் புரொடக்‌ஷன், குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் சார்பில் எம்.ஈ.ரவிராஜா, கோவை லட்சுமி ராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

விழாவில் பேசிய கவுண்டமணி, ‘இந்த விழாவுக்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என்று, அத்தனைபேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை நன்றாக பாருங்கள். ஒத்த ஒட்டு முத்தையா’வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட. இத்துடன் எனது பேச்சை நிறைவு செய்துகொள்கிறேன்’ என்றார்.

Read Entire Article