கேன் வாட்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு… உணவு பாதுகாப்புத் துறை அளித்த அறிவுரை!!

19 hours ago
ARTICLE AD BOX

கேன் வாட்டர் பயன்படுத்துபவர்கள் இத்தனை முறைதான் ஒரு கேனை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் கிணற்றிலிருந்து நீர் எடுத்து குடிப்பார்கள். அதன்பின் அப்படியே மக்கள் குழாய் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், இப்போது வீட்டுக்கே வருகிறது என்பதற்காக அனைவரும் கேன் வாட்டரே பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் சொல்லவே தேவையில்லை. வீட்டுக்கு வீடு கேன் வாட்டர்தான். அதுவும் பலர் ஒரே கேனை வெகுநாட்களாக பயன்படுத்துகிறார்கள். அதில் எவ்வளவு கேடுகள் இருக்கிறது என்பதை அறியாமல்.

இதனை எடுத்து சொல்லும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணர்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார், “குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். கீறல் விழுந்த அழுக்கடைந்த கேன்களை பயன்படுத்த வேண்டாம், நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டிருக்கும் கேன்களில் உள்ள குடிநீரை பயன்படுத்த கூடாது, குடிநீர் தரத்தை உறுதி செய்வது அவசியம்.” என்று பேசினார்.

மேலும் இனி வரும் வாரங்களில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் அடுத்தடுத்து சோதனை மேற்கொள்ளப்படும்.” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் பெரும்பாலும் நீர் தேக்கங்களும், நிலத்தடி நீரும், கடல் நீரும் ஆதாரமாக இருக்கிறது.

ஆனால், தனியார் குடிநீர் விற்பனையாளர்கள் அதிகம் நிலத்தடி நீரையே நம்பியிருக்கிறார்கள். இந்த RO, UV (Ultraviolet), மற்றும் ஓசோன் சுத்திகரிப்பு மூலம் நிலத்தடி நீர் தூய்மைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதில் கனிம உப்புகள் மிகவும் குறைவு.

அதேபோல், இந்த நீர் ப்ளாஸ்டிக் கேனில் அடைக்கப்படுவதால் இன்னும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த கேனில் இருக்கும் ப்ளாஸ்டிக் துகள்களால் கேன்ஸர் நோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்த அழகு நடையுடைய பெண்கள் நின்று நிதானித்து செயல்படுவார்களாம்..!
Cane water
Read Entire Article