ARTICLE AD BOX
Published : 17 Mar 2025 05:45 AM
Last Updated : 17 Mar 2025 05:45 AM
கேதார்நாத் பகுதிக்கு இந்துக்கள் அல்லாதவர்கள் வர தடை விதிக்க பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்

கேதார்நாத் பகுதிக்கு இந்துக்கள் அல்லாதவர்கள் வர தடை விதிக்க வேண்டும் என கேதார்நாத் எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம், கேதார்நாத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஆஷா நவுதியால் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “கேதார்நாத் பகுதி மக்களுடன் நான் கலந்துரையாடினேன். அப்போது, கேதார்நாத்துக்கு வரும் இந்துக்கள் அல்லாதவர்கள் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக புகார் தெரிவித்தனர். எனவே, இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தப் பகுதிக்கு வர தடை விதிக்க வேண்டும். இப்பகுதி வர்த்தகர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளனர்” என்றார்.
இதுகுறித்து பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் மன்வீர் சிங் சவுகான் கூறும்போது, “இந்துக்களின் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், கேதார்நாத் எம்எல்ஏ-வின் கருத்துக்கு பாஜக ஆதரவு அளிக்கிறது. இந்சர் பகுதியில் சிலர் மது மற்றும் இறைச்சிகளை விற்பதும் தெரியவந்துள்ளது. புனிதமான இப்பகுதியில் இதுபோன்ற செயலை அனுமதிக்கக் கூடாது” என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கரண் மஹரா கூறும்போது, “அரசியல் ஆதாயம் தேடுவதற்காக எம்எல்ஏ ஒருவர் இவ்வாறு பேசி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அரசியல் சாசனப்படி பதவியேற்றுள்ளவர்கள் அனைத்து குடிமக்களையும் சமமாக கருத வேண்டும்” என்றார்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மாணவர்கள் முன் 50 தோப்புக்கரணம் போட்டு நன்றாக படிக்க மன்றாடிய தலைமை ஆசிரியர்
- ஜம்மு காஷ்மீர் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் தீவிரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
- ஏமனில் அத்துமீறும் ஹவுதி தீவிரவாதிகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழப்பு
- டாஸ்மாக் முறைகேட்டில் தீவிரமாக ஆராய்ந்தால் சிறு மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்: தவெக தலைவர் விஜய்