ARTICLE AD BOX
இந்திய கிரிக்கெட் அணி நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த கேஎல் ராகுல் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கேஎல் ராகுல் சிறப்பான பேட்டிங்
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கேஎல் ராகுல் மெதுவாக விளையாடியதற்காக பெரிதளவில் விமர்சிக்கப்பட்டார். இது அவரை சற்று மனதளவில் காயப்படுத்தியது என்றே கூறலாம். இருப்பினும் ரோஹித் சர்மா மற்றும் கோச் கம்பீர் ஆகியோர் அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் அவரை முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்தனர்.
விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் பேட்டிங்கிலும் அற்புதமான பங்களிப்பை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 34 பந்துகளில் 42 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 33 பந்துகளில் 34 ரன்கள் குறித்து சேசிங்கில் இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய பங்காற்றினார். இந்த சூழ்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் கேஎல் ராகுல் குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
அவருக்கு எதிரி பவுலர் இல்லை
இது குறித்து அவர் கூறும் போது “அவருக்கு இந்த வெற்றி மிக முக்கியமானது. ஏனென்றால் கடந்த இறுதிப் போட்டியின் போக்கை தற்போது வரை சுமந்து கொண்டிருந்தார். அவர் அந்த போட்டியில் மெதுவாக விளையாடியதால் மிகப்பெரிய நேர்காணலை வெளிப்படுத்தினார். அது அவரை சற்று காயப்படுத்தியது என்றே கூறலாம். குறிப்பாக செமி பைனல் மற்றும் பைனல் ஆகிய இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்தது.
இதையும் படிங்க:ரோஹித்துக்கு இந்த திறமை ஒரு வரப்பிரசாதம்.. கொஞ்சம் கூட கஷ்டம் இல்லாமல் இதை செய்வார் – அஜய் ஜடேஜா பேட்டி
ரன்கள் இலக்கை துரத்தும் போது அவர் வசதியாக தெரிந்தார். கேஎல் ராகுலுக்கு இருக்கும் ஒரே எதிரி பந்துவீச்சாளர் கிடையாது, அவரது சொந்த மனநிலை. இந்த தொடரில் அவர் மிகவும் நிதானமாக இருந்தார். மேலும் தொடர்ந்து விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவர் தனது விருப்பத்திற்கு தகுந்தவாறு பெரிய ஷாட்கள் சிறப்பாக விளையாடினார். அது பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறி இருக்கிறார்.
The post கேஎல் ராகுலுக்கு எதிரி பவுலர் கிடையாது.. இந்த ஒரே ஒரு விஷயம்தான் – இந்திய முன்னாள் வீரர் appeared first on SwagsportsTamil.