ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. டாப் 8 அணிகள் பங்கு பெற்ற இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் பல பரிட்சை நடத்தியது.இதில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது.
இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வியை தழுவாமல் விளையாடி கோப்பையை வென்றிருக்கிறது. இந்த சூழலில் ஒவ்வொரு ஐசிசி தொடர் முடிவடைந்த பெரும் இந்த தொடரில் பங்கேற்ற சிறந்த 11 வீரர்களை கனவு அணியாக ஐசிசி அறிவிக்கும். அதன்படி நடப்புச் சாம்பியன் டிராபி தொடரில் இடம்பெற்றிருக்கும் வீரர்களை தற்போது பார்க்கலாம்.

இந்த அணியில் தொடக்க வீரராக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இன்று தொடரில் ரச்சின் ரவீந்தரா 263 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெயரை பெற்றார். இந்த அணியில் மற்றொரு தொடக்க வீரராக ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சாட்ரன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இப்ராஹீம் சாட்ரரன் இந்த தொடரில் 216 ரன்கள் அடித்துள்ளார்.
இந்த அணியில் மூன்றாவது இடத்தில் விராட் கோலி இடம் பிடித்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு சதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரை சதம் அடித்த விராட் கோலி இந்த தொடரில் 218 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த அணியில் நான்காவது வீரராக இந்தியாவின் ஸ்ரேயாஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த தொடரில் 243 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.இந்த அணியில் ஐந்தாவது வீரர் மற்றும் விக்கெட் கீப்பராக கே எல் ராகுல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த அணியின் ஆறாவது வீரராக நியூசிலாந்தை சேர்ந்த கிளன் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
ஏழாவது வீரராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஆல் ரவுண்டர் அஸ்மத்துல்லா ஒமர்சாய் இடம் பெற்றிருக்கிறார். இந்த அணியில் எட்டாவது வீரராக நியூசிலாந்தை சேர்ந்த மிட்செல் சாட்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அது மட்டும் இல்லாமல் இந்த கனவு அணியின் கேப்டன் ஆகவும் சாண்ட்னர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சாண்ட்னர் பந்து வீச்சில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் ஒன்பதாவது வீரராக இந்தியாவின் முகமது சமி இடம் பெற்றுள்ளார். சமி இந்த தொடரில் மொத்தம் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியில் பத்தாவது வீரராக மாட் ஹென்றியும், பதினோராவது வீரராக தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தியும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். 12-வது வீரராக அக்சர் பட்டேலுக்கு இடம் கிடைத்திருக்கிறது. 12 பேர் கொண்ட இந்த அணியில் 6 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். எனினும் கேப்டன் ரோகித் சர்மா இந்த கனவு அணியில் இடம் பெறவில்லை.