ARTICLE AD BOX

மும்பை,
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் - அமெலியா கெர் களமிறங்கினர்.
இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் மேத்யூஸ் 27 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்கியது. இறுதியில் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிபெற 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதில் கன்வர் 10 ரன்களிலும், சிம்ரன் ஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.
�