ARTICLE AD BOX
கெட்ட கொழுப்பை கரைக்கும் முள்ளங்கி..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் சத்தான உணவு முறையை பின்பற்ற வேண்டும் என்பதை அலட்சியமாக எடுத்துக் கொள்கிறோம். இந்நிலையில் அதிக சத்துக்கள் நிறைந்த முள்ளங்கியின் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
முள்ளங்கியை நமது உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் மற்றும் உடலில் உள்ள கழிவுகளை நீக்க முடியும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு அற்புதமான மருந்து என்று கூட சொல்லலாம். முள்ளங்கி சாப்பிடுவதால் சிறுநீரகத் தொற்றை இது சரி செய்யும் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். நீர் சத்துக்களை உடலில் சேர்க்கும் மற்றும் மூட்டு வலி வீக்கத்தை குறைத்து பற்களுக்கு நல்லது செய்யும். ரத்தத்தில் உள்ள பிலுருபினை வினை சீர் செய்வதால் மஞ்சள் காமாலையை குணமாக்க இது மிகவும் உதவுகிறது. மலக்குடலில் உள்ள கழிவை வெளியேற்றி குடலை சுத்தம் செய்யும். முள்ளங்கி சாப்பிடுவதால் ஆஸ்துமா தொண்டை எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகள் தேவையில்லாத உடலில் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றை சரி செய்யலாம். இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.