ARTICLE AD BOX
முகம் சரியாக தெரியாமல் கூலி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் துவங்குகிறது.
இந்த நிலையில் முகம் தெரியாமல் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. இது நாளைக்குத்தான் யார் என்று தெரியுமென படக்குழு கூறியுள்ளது.
சமூக வலைதளங்களில் பலரும் இந்தப் புகைப்படம் பூஜா ஹெக்டே எனக் கூறியுள்ளார்கள்.
ஏற்கனவே இந்தப் படத்தில் குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படம் கோடை விடுமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
