குஷ்பு தயாரிக்கும் ரொமான்ஸ் கலந்த காமெடி படம்

10 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் 'வருஷம் 16' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பு. பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக திகழ்ந்தார். இயக்குனர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை குஷ்பு அவ்னி சினிமேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் சுந்தர்.சி இயக்கிய படங்கள், நடித்த படங்களை மட்டுமே தயாரித்து வந்தார். தற்போது அவ்னி மூவிஸ் என்ற பெயரில் மற்றொரு நிறுவனம் தொடங்கி பென்ஸ் மீடியாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளார்.

அறிமுக இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இப்படத்தை இயக்க உள்ளார். இதில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இளம்வயது ஆதித்த கரிகாலனாக நடித்த சந்தோஷ் நாயகனாக நடிக்கிறார். ரேஷ்மா வெங்கடேஷ் நாயகியாக நடிக்கிறார். மேலும், படத்தில் வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் மற்றும் பிஜோர்ன் சுர்ராவ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இன்னும் பெரியடப்படாத இப்படம் காதல் கலந்த ரொமான்ஸ் காமெடி படமாக உருவாக உள்ளது.


Read Entire Article