குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் ஸ்ட்ராபெர்ரி அல்வா!

3 hours ago
ARTICLE AD BOX

குழந்தைகளுக்கு விதவிதமான இனிப்புகளை கடைகளில் வாங்கி கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவதை விட, வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் இனிப்பு பலகாரங்களை செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு இனிப்பு பலகாரம்தான் ஸ்ட்ராபெர்ரி அல்வா. இந்த அல்வா குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் சுவையான ஒரு இனிப்பு. ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மணமும், இனிப்பும் அல்வாவின் சுவையை மேலும் கூட்டுவதால், நிச்சயம் உங்கள் வீட்டு குட்டீஸ்களுக்கு இந்த அல்வா மிகவும் பிடிக்கும். 

தேவையான பொருட்கள்:

  • ஸ்ட்ராபெர்ரி பழம் - 250 கிராம்

  • சர்க்கரை - 1 கப்

  • நெய் - 1/4 கப்

  • மைதா மாவு அல்லது கோதுமை மாவு - 1/4 கப்

  • ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி

  • முந்திரி மற்றும் திராட்சை - அலங்கரிக்க தேவையான அளவு

  • தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

  1. முதலில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரி சாறை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

  2. அடுத்ததாக, ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் நெய் சேர்க்கவும். நெய் உருகியதும் மைதா மாவு அல்லது கோதுமை மாவை சேர்த்து லேசாக வறுக்கவும். மாவு லேசாக வறுபட்டதும், அரைத்து வடிகட்டி வைத்துள்ள ஸ்ட்ராபெர்ரி சாற்றை கடாயில் ஊற்றி கட்டி பிடிக்காமல் நன்றாக கிளறவும்.

  3. ஸ்ட்ராபெர்ரி சாறு மாவுடன் சேர்ந்து கொதிக்க ஆரம்பித்ததும், சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கைவிடாமல் கிளறவும். சர்க்கரை நன்றாக கரைந்து அல்வா பதம் வரும் வரை மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அல்வா கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும் பதம் தான் சரியான பதம்.

  4. அல்வா பதம் வந்தவுடன் ஏலக்காய் பொடியை தூவி, மீதமுள்ள நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். நெய் பிரிந்து அல்வா பளபளப்பாக வரும் வரை கிளறவும்.

  5. அல்வா தயாரானதும் அடுப்பை அணைத்துவிட்டு, முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து அல்வாவில் சேர்த்து அலங்கரித்தால் சூடான சுவையான ஸ்ட்ராபெர்ரி அல்வா தயார்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் ஆமை சிலை எங்கு எப்படி வைக்க வேண்டும்? பலன்கள் என்ன?
Strawberry halwa

நீங்களும் உங்கள் வீட்டில் இந்த ஸ்ட்ராபெரி அல்வாவை செய்து கொடுத்து உங்கள் குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை பாருங்கள். நிச்சயம் அவர்கள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

Read Entire Article