தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஹீரோயினுக்கான கதைகளை தேர்வு செய்த நிலையில அந்த படங்கள் பெரியளவில் ரீச் கொடுக்கவில்லை. அதன் பிறகு வாய்ப்பும் இல்லாமல் ஓரிரு படங்களில் நடித்தார். பொன்னியின் செல்வன் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

த்ரிஷா நடிப்பில் வெளியான படங்கள்

ஏற்கனவே மலையாலத்தில் ஐடெண்டிட்டி என்ற படம் இவர் நடிப்பில் வெளியான நிலையில், கடந்த மாதம் விடாமுயற்சி படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து வரும் ஏப்ரல் 10ஆம் தேதி 'குட் பேட் அக்லீ' படம் வெளியாகி இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், யோகி பாபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், பிரபு, சுனில் ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது விஸ்வம்பரா, தக் லைஃப், சூர்யா 45 மற்றும் ராம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் த்ரிஷா சினிமாவில் எப்படி லேசா லேசா படத்தில் ஹீரோயினாக மாறினார் என்பது குறித்து ராதாரவி ஓப்பனாக பேசியிருக்கிறார்.

த்ரிஷா பற்றி கூறிய ராதாரவி:

பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வந்த ஜோடி படம் மூலமாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை த்ரிஷா. அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படம் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு மனசெல்லாம், சாமி, லேசா லேசா என்று பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் த்ரிஷா பற்றி பேசிய ராதா ரவி கூறியிருப்பதாவது: த்ரிஷா ஓவர்நைட்டுல சேஞ்ச் ஆனாங்க. லேசா லேசா படத்தில் ஹீரோயினா நடிக்க மும்பையிலிருந்து ஒரு நடிகை வர வேண்டியது. ஆனால், அவர் கொஞ்சம் லேட்டாக வந்தார்.

அப்போது அங்கு இருந்த 6, 7, பெண்களில் த்ரிஷா பார்க்க அழகாக இருந்தாங்க. அதனால், த்ரிஷாவை ஹீரோயினாக நடிக்க வைத்தார்கள். அப்படி தான் இந்த படம் இவருக்கு சூப்பர் கிட்டும் கொடுத்தது.
சினிமா அப்படிதான். எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. டக்கு டக்குனு மாறிக் கொண்டே இருக்கும். எல்லாமே எழுதப்பட்ட விதி. இதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்று கூறியுள்ளார்.