குலசையில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணி தொடக்கம்: 2026 ஆகஸ்டில் முடியும் என தகவல்

12 hours ago
ARTICLE AD BOX

உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் மணப்பாடு கிழக்கு கடற்கரையை ஒட்டிய கூடல்நகரைச் சுற்றி 2,292 ஏக்கர் நிலத்தில் ரூ.985.96 கோடி மதிப்பீட்டில் புதிதாக சிறிய ரக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக கடந்தாண்டு தூத்துக்குடியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் நேற்று ராக்கெட் ஏவுதளத்தில் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. இந்த பணிகளை இஸ்ரோ ஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதள இயக்குநர் ராஜராஜன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிருபர்களிடம் ராஜராஜன் கூறுகையில், ‘குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிகள், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும். இங்கு சிறிய ரக ராக்கெட்டுகள் ஏவப்படும். ராக்கெட் ஏவுதளத்தில் லாஞ்ச் பேட் உள்ளிட்ட 20 உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. தற்போது முதற்கட்டமாக உள்கட்டமைப்பு பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. 2026 இறுதிக்குள் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும்’ என்றார்.

The post குலசையில் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணி தொடக்கம்: 2026 ஆகஸ்டில் முடியும் என தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article