ARTICLE AD BOX
நாகர்கோவில்,
பாதுகாப்பை மேம்படுத்தவும் பயணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதி செய்யவும், குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பெட்டிகள் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது ஏப்ரல் 13-ல் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாகர்கோவிலில் இருந்து ஷாலிமார் செல்லும் குருதேவ் எக்ஸ்பிரஸில் (வண்டி எண் 12550) ஏப்ரல் 13ம் தேதியில் மாற்றங்கள் செய்யப்பட்ட பெட்டிகளுடன் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் ஷாலிமாரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸில் (வண்டி எண் 12660) ஏப்ரல் 16ம் தேதி முதல் மாற்றங்கள் செய்யப்பட்ட பெட்டிகளுடன் இயக்கப்படும்
பெட்டிகளில் செய்யப்படும் மாற்றங்கள் : 1-ஏசி 2 டயர் கோச் (Two Tier Coach) , 7-ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள் ( Three Tier Coaches) , 8- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் ( Sleeper Class Coaches) , 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class Coaches) , 1- இரண்டாம் வகுப்பு பெட்டி (Second Class Coach) மற்றும் 1- லக்கேஜ் (Luggage ) என திருத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது