திருப்பதி | ஏழுமலையான் கோயிலின் உண்டியல் காணிக்கை இரண்டு மடங்கு உயர்வு!

3 hours ago
ARTICLE AD BOX
Published on: 
07 Feb 2025, 3:58 pm

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் உண்டியல் காணிக்கை, கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி
திருப்பதிபுதிய தலைமுறை

2011-12 ஆம் நிதியாண்டில் 692 கோடி ரூபாயாக இருந்த உண்டியல் காணிக்கை 2012-13ஆம் நிதியாண்டில் 770 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2013-14ஆம் நிதியாண்டில் 746 கோடி ரூபாயும், 2014-15ஆம் நிதியாண்டில் 862 கோடி ரூபாயும், 2015-16ஆம் நிதியாண்டில் 915 கோடி ரூபாயும், 2016-17 ஆம் நிதியாண்டில் 990 கோடி ரூபாயும், 2017-18ஆம் நிதியாண்டில் 991 கோடி ரூபாயும் உண்டியல் காணிக்கையாக வந்துள்ளன. இதேபோல், 2018-19ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 52 கோடி ரூபாயும், 2019-20ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 95 கோடி ரூபாயும், 2020-21ஆம் நிதியாண்டில் 546 கோடி ரூபாயும் காணிக்கையாக கிடைத்துள்ளன. 2021-22ஆம் நிதியாண்டில் 839 கோடி ரூபாயும், 2022-23ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 450 கோடி ரூபாயும் காணிக்கையாக வந்துள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் ஆயிரத்து 391 கோடி ரூபாயாக வந்த உண்டியல் காணிக்கை, நடப்பு நிதியாண்டில் ஆயிரத்து 365 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

திருப்பதி
திருப்பதி: எதிர்பார்த்ததை விட எகிறும் உண்டியல் வருவாய் - எத்தனை கோடிகள் தெரியுமா?
Read Entire Article