ARTICLE AD BOX
உத்தரப் பிரதேசத்தி்ன், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள முடியாத சிறைக் கைதிகளுக்கு உ.பி. அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சௌகான் கூறுகையில்,
உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் திரிவேணி சங்கமத்தை அடைய முடியும், ஆனால் சிறைக் கைதிகளால் அதைச் செய்ய இயலாது.
எனவே சிறைகளில் உள்ள கைதிகளுக்குப் புனித நீர் விநியோகிக்க ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். மாநிலம் முழுவதும் உள்ள 7 மத்தியச் சிறைகள் உள்பட 75 சிறைகளில் தற்போது 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
சிறைச்சாலை இயக்குநர் ஜெனரல் பி.வி. ராமசாஸ்திரி கூறுகையில்,
சங்கமத்திலிருந்து வரும் புனித நீர் கொண்டுவரப்பட்டு கைதிகள் குளிப்பதற்கான ஏற்பாடுகள் அமைச்சரின் மேற்பார்வையில் செய்யப்பட்டன.
சங்கமத்திலிருந்து கொண்டுவந்த புனித நீரை அனைத்து சிறைகளுக்கும் கொண்டு வரப்பட்டு, வழக்கமான தண்ணீருடன் கலந்து ஒரு சிறிய தொட்டியில் சேமிக்கப்பட்டது. பின்னர் கைதிகள் பிரார்த்தனை செய்து தண்ணீரில் குளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13ல் தொடங்கி மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதியும் நிறைவடைகின்றது.