ARTICLE AD BOX
வேலூர் : காட்பாடியில் கெமிக்கல் கழிவுகளை கொட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த ஏரந்தாங்கலில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள கெமிக்கல் கழிவுகளை நேற்றுமுன்தினம் காலை காட்பாடி-தாங்கல் பஸ் நிறுத்தத்தில் காட்பாடி காந்தி நகரைச் சேர்ந்த விஜய், வேப்பூரை சேர்ந்த பெருமாள் ஆகியோர் வாகனத்தில் கொண்டு வந்து கொட்டியுள்ளனர். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர்.
ஆனால் அங்கிருந்து 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பிரம்மபுரம் விஏஓ ரேகாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், புகார் தெரிவிக்கப்பட்ட பெருமாள், விஜய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காட்பாடியில் விஏஓ புகார் கெமிக்கல் கழிவு கொட்டிய 2 பேர் மீது போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.