இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக வருகை

3 hours ago
ARTICLE AD BOX

ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து ஒரே குடும்பதை சேர்ந்த 4 பேர் படகில் ராமேஸ்வரம் வந்தனர்.ராமேஸ்வரம் அரிச்சல்முனை நான்காம் மணல் தீடையில் சிலர் இருப்பதாக அப்பகுதி மீனவர்கள், மரைன் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஹோவர் கிராப்ட் கப்பலில் சென்று கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டனர். விசாரணையில், அவர்கள் இலங்கை அகதிகள் என தெரியவந்தது. 4 பேரையும் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்கள் இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த கலைசெல்வன் (37), அவரது மனைவி கிருபனா (35) மற்றும் 7, 5 வயது மகன்கள் என தெரிந்தது. இலங்கையில் இருந்து படகுக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்து தலைமன்னாரிருந்து நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு குடும்பத்துடன் புறப்பட்டு அதிகாலை மணல் தீடையில் வந்து இறங்கியுள்ளனர்.

கலைச்செல்வன் தம்பதி திருவண்ணாமலை செய்யாறு அகதி முகாமில் 2007 முதல் 2018 வரை இருந்துள்ளனர். உறவினர்களை சந்திக்க இலங்கை சென்ற இவர்கள், வாழ்வாதார பிரச்னையால் மீண்டும் அகதிகளாக வந்துள்ளது விசாரணையில் தெரிகிறது. மத்திய, மாநில புலனாய்வுத்துறை போலீசாரின் விசாரணைக்கு பிறகு மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

The post இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக வருகை appeared first on Dinakaran.

Read Entire Article