ARTICLE AD BOX
குதிகால் வெடிப்பை போக்குவதற்கு இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!
குதிகால் வெடிப்பை போக்க வெள்ளை வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து அந்த நீரில் கால்களை 20 இலிருந்து 25 நிமிடம் ஊற வைத்து மெருகேற்றும் கல்லை கொண்டு நன்கு தேய்த்து கழுவினால் இறந்து செல்கள் நீங்கி வெடிப்பு மறைந்து குதிகால் மென்மையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தயிர்:
குதிகால் வெடிப்பை போக்க தயிரை வெள்ளை வினிகருடன் சேர்த்து கலந்து அதனை குதிகாலில் தடவி நன்கு ஊற வைத்து பின்பற்றி வைத்து கழுவினால் குதிகால் வெடிப்பு போகும்.
தேன்: வினிகரில் தேன் சேர்த்து நன்றாக கலந்து அதனைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து நன்கு உலர வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும் இவ்வாறு கழுவினால் விரைவில் குதிகால் வெடிப்பு குணமடையும்.
ஆலிவ் ஆயில்:
ஆலிவ் ஆயிலை வினிகருடன் சேர்த்து கலந்து குதிகால்களை மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து மெருகேற்ற உதவும் கல்லை கொண்டு தேய்த்து கழுவினால் வினிகர் இறந்து செல்களை நீக்கி ஆலிவ் ஆயில் வறட்சியை நீக்கும்.