தள்ளிப்போன ‘குடும்பஸ்தன்’ ஓடிடி ரிலீஸ்!

2 hours ago
ARTICLE AD BOX

குடும்பஸ்தன் படத்தின் ஓடிடி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.தள்ளிப்போன 'குடும்பஸ்தன்' ஓடிடி ரிலீஸ்!

மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் குடும்பஸ்தன் எனும் திரைப்படம் உருவாகி இருந்தது. அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியிருந்த இந்த படம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தில் மணிகண்டனுடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன், நிவேதிதா ராஜப்பன் மற்றும் பலர் நடித்திருந்தனர். சினிமாக்காரன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. வைஷாக் இதற்கு இசையமைத்திருந்தார். காமெடி கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. மேலும் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றுள்ளது. தள்ளிப்போன 'குடும்பஸ்தன்' ஓடிடி ரிலீஸ்!நடிகர் மணிகண்டன் வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். இந்நிலையில் இப்படம் நேற்று (பிப்ரவரி 28) ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் குடும்பஸ்தன் திரைப்படம் வருகின்ற மார்ச் 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.

Read Entire Article