ARTICLE AD BOX

Good Bad Ugly: விடாமுயற்சி முடிந்துவிட்ட கையோடு அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி டீசர் நாளை வெளியாக இருக்கும் நிலையில், அதன் இன்னொரு சூப்பர் அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கான பெயர் குட் பேட் அக்லி என வைக்கப்பட்டு இருக்கிறது. பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்து இருக்கிறது.
முதலில் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருந்தார். ஆனால் அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஏற்பட்ட திடீர் மனக்கசத்தால் அவர் படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதில் தற்போது ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித்குமார் தன்னுடைய வழக்கமான பாணியை விட்டு ரெட்ரோ ஸ்டைலில் புது விதமாக 3 கெட்டப்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் திரிஷா, சுனில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படம் தற்போது 270 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. கடந்தாண்டு ஹைத்ராபாத்தில் இப்படத்தின் முதல் ஷெட்யூல் தொடங்கி நடந்தது. அதை தொடர்ந்து விறுவிறுப்பாக இப்படத்தின் ஷூட்டிங் இறுதியை நெருங்கி வருகிறது. இன்னும் சில தினங்கள் மட்டுமே மிச்சமுள்ளது.
இப்படத்தினை ஏப்ரல் 2025ம் ஆண்டு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான டீசரை நாளை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் நாளை டீசர் வெளியாக இருக்கும் நிலையில், அது 1 நிமிடம் 34 நொடி ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டீசர் அறிவிப்புக்கு மன்னர் செமையாக ஹைப் ஏத்தி ரசிகர்களை ஈர்த்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ். இதனால் குட் பேட் அக்லி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.