GBU என்றால் குட் பேட் அக்லி மட்டும் இல்லை.. இது ஒரு தனி யுனிவர்ஸ்.. அல்டிமேட் பண்ணும் அஜித்!

4 hours ago
ARTICLE AD BOX

GBU என்றால் குட் பேட் அக்லி மட்டும் இல்லை.. இது ஒரு தனி யுனிவர்ஸ்.. அல்டிமேட் பண்ணும் அஜித்!

News
oi-Mohanraj Thangavel
| Published: Friday, February 28, 2025, 15:41 [IST]

சென்னை: அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் இன்று அதாவது பிப்ரவரி 28ஆம் தேதி மாலை 7.03 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கும் இந்த டீசர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தியேட்டர்களிலும் ஒளிபரப்படுகிறது. இந்நிலையில் GBU என்றால் குட் பேட் அக்லி மட்டும் இல்லை அதற்கு வேறு ஒரு அர்த்தம் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிசந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்கள் இந்த படத்தின் மீது பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் படத்தின் புரோமோசன் வேலைகளை படக்குழு தொடங்கிவிட்டது.

Ajithkumar Good Bad Ugly GV Prakash Kumar

ஏற்கனவே படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் கூறும்போது, இந்த படத்தில் அஜித் குமாருக்கு மாஸான காட்சிகள் நிறைய உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் ஃபேன் பாயாக இருந்து இந்த படத்தை எடுத்துள்ளார். அஜித்தை முதல் ஷாட்டில் இயக்கிவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் கண்ணீர் சிந்தி அழுதுள்ளார் எனவும் ஜி.வி. கூறினார்.

Ajithkumar Good Bad Ugly GV Prakash Kumar

குட் பேட் அக்லி: மேலும் படத்திற்கு தனது கெரியர் பெஸ்ட் இசையைக் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுமட்டும் இல்லாமல், இந்தப் படத்தில் பணியாற்றியது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சிதான் எனத் தெரிவித்தார். மேலும் படம் குறித்து அதிகம் ஜி.வி. பிரகாஷ் குமார்தான் அதிகம் ரசிகர்கள் மத்தியில் பல அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார். அப்படி இருக்கும்போது, படம் குறித்து அவர் பதிவிடும் எக்ஸ் பதிவுகளில், யுனிவர்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார். மேலும் வோர்ல்ட் என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறார்.

Ajithkumar Good Bad Ugly GV Prakash Kumar

யுனிவர்ஸ்: இதனால் ரசிகர்கள் மத்தியில் குட் பேட் அக்லி படம் ஒரு படத்துடன் முடிவது கிடையாது என்ற பேச்சு உலாவருகிறது. அதிலும் குறிப்பாக, இந்த படத்தை வைத்து அடுத்தடுத்து படங்களும், கதைகளின் துணைக்கதைகளையும் உருவாக்க அஜித், மைத்ரி மூவிஸ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்களாம். அதற்காகத்தான் படத்தின் பெயரை GBU என வைத்துள்ளார்கள். ஆனால் இதற்கு முன்னறிவிப்பாக குட் பேட் அக்லி என தெரிவித்துள்ளதாகவும், படத்தின் முடிவில் GBU என்றால் என்ன, என தெரிவிப்பார்கள் எனவும் கூறி வருகிறார்கள்.

ஜி.வி. பிரகாஷ்: அதாவது GBU-வில் இருக்கும் U என்றால் யுனிவர்ஸ் என்றும் பேசி வருகிறார்கள். அதனால்தான் ஜி.வி. பிரகாஷ் குமாரும் தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்து ஏதாவது பதிவிட்டால், அதில், யுனிவர்ஸ் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்தத் தகவல் தெரிந்த ரசிகர்கள் செம குஷியில் உள்ளார்கள். கடைசியாக ஜி.வி. பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில் கூட, " ஆரவாரமா இன்னைக்கு ஆரம்பிக்கறோம் மாமே. இன்றைக்கு நாம் GBU உலகத்திற்குள் செல்லவுள்ளோம். இந்த உலகத்திற்கு நன்றி" எனவும் குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Ajithkumar Good Bad Ugly GV Prakash Kumar

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Ajithkumar Good Bad Ugly Movie Has Lots Of Back Stories and Universe
Read Entire Article