ஆர்யா நடித்த மிஸ்டர் எக்ஸ் படத்தின் `ஹைய்யோடி' பாடல் ரிலீஸ்...!

5 hours ago
ARTICLE AD BOX

ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்தின்  `ஹைய்யோடி' பாடல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ஆர்யா, சார்பட்டா பரம்பரை 2, வேட்டுவம் ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அதுல்யா ரவி, அனகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். எஃப்ஐஆர் பட இயக்குனர் மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

Happy birthday @dhibuofficial brother 😍🤗
Thank you so much for this beautiful song 😍

A new symbol of love ❤️ #Haiyodi from #MrX out now.

▶️ https://t.co/vipcpNyx54

A @dhibuofficial musical.

Sung by @KapilKapilan_
Lyrics by @KrithikaNelson

Produced by @lakku76 #Maverikpic.twitter.com/idETrsIc1z

— Arya (@arya_offl) February 27, 2025


 ஸ்பை திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான 'ஹைய்யோடி' வெளியாகியுள்ளது. கிருத்திகா நெல்சன் எழுதியுள்ள இந்தப் பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார். 
 

Read Entire Article